கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 45 பேர் மருத்துவப் படிப்புக்கு தேர்வு: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்து..!!

Author: Rajesh
29 January 2022, 5:40 pm

கோவை: கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 45 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

கோவை அரசு பள்ளிகளில் இருந்து, 5 பேர் எம்.பி.பி.எஸ்., 3 பி.டி.எஸ்., உட்பட 8 பேர், முதல் நாள் கலந்தாய் வில் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்தனர்.

சென்னையில் மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சிறப்பு பிரிவு மாணவர்கள் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந் தாய்வு நேற்றும், இன்றும் நடக்கிறது.

கோவையில் இருந்து, 49 மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்று இருந்தனர். இதில் நேற்றைய கலந்தாய்வில் 15 பேர் பங்கேற்றனர். முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்றதில், ஒண்டிப்புதூர் ஆர்.சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்வேதா சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையும், தொண்டாமுத்துதூர் பள்ளி மாணவி சுருதி திருப்பூர் மருத்துவ கல்லூரியும், சமத்தூர் எஸ்.வி.பள்ளி மாணவன் யுவன் ராஜ் ஈரோடு மருத்துவ கல்லூரியும், காட்டம்பட்டி டி.எஸ்.ஏ., பள்ளி மாணவி அபர்ணா விருதுநகர் மருத்துவ கல்லூரியும், ஒப்பணக்கார வீதி அரசு பள்ளி மாணவன் அப்ரின் ஜெகன் கரூர் மருத்துவ கல்லூரியும், ரங்கநாதபுரம் அரசு பள்ளி மாணவி தேவி சேலம் அன்னபூர்ணா மருத்துவ கல்லூரியும் தேர்வு செய்தனர்.

முத்து கவுண்டனூர்அரசு பள்ளி மாணவி சங்கீதா, ராஜ வீதி அரசு பள்ளி மாணவி பூர்ணிமா ஆகியோர் கோவை ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையை தேர்வு செய்துள்ளனர். கோவையில் இருந்து தகுதி பெற்ற 49 பேரில், 15 பேர் முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்றனர். மாலை வரை 8 பேர் விருப்ப கல்லூரியை தேர்வு செய்துள்ளனர்.
தொடர்ந்து இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் கீதா வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 2448

    0

    0