விமானத்தில் வந்த 47 அரிய வகை பாம்புகள், பல்லிகள் : சோதனையின் போது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2023, 11:16 am

விமானத்தில் வந்த 47 அரிய வகை பாம்புகள், பல்லிகள் : சோதனையின் போது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!!

மலேசியாவில் இருந்து இன்று திருச்சி விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக நடந்து கொண்ட ஆண் பயணியின் உடமையை சோதனை செய்த போது அதில் 47அரியவகை பாம்புகள் மற்றும் 2 பல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவற்றைப் பறிமுதல் செய்த செய்த அதிகாரிகள் இதுகுறித்து
வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். திருச்சி மாவட்ட வன அதிகாரிகள் பாம்புகள் மற்றும் பல்லிகளை எடுத்துச் சென்றனர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாம்பு மற்றும் பல்லி களை கடத்தி வந்த நபர் சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் (வயது 30) என தெரியவந்தது.

தொடர்ந்து அதிகாரிகள் முகமதுமொய்தீன் யாருக்காக அவற்றை
கடத்தி வந்தார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வந்த நிலையில் தற்பொழுது அரிய வகை பாம்பு கடத்திவரப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!