நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் பாஜக சார்பில் 475 பேர் விருப்ப மனு…மத்திய அமைச்சர் எல்.முருகன் நேர்காணல்..!!
Author: Rajesh29 January 2022, 12:37 pm
கோவை: உள்ளாட்சி தேர்தலுக்காக கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் நேர்காணல் நடத்தினார்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள் மற்றும் மாநகர மாவட்ட எல்லையில் உள்ள ஏழு பேரூராட்சிகளில் 105 வார்டு களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளித்வர்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் ஜி கே செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழு இந்த நேர்காணலை நடத்தியது.
காலை 10 மணிக்கு துவங்கிய நேர்காணலில் விருப்ப மனு அளித்த 475 பேர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தொகுதி வாரியாக நடக்கும் இந்த நேர்காணல் இரவு வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.