500க்கு 499 மதிப்பெண்கள்.. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சத்தமே இல்லாமல் சாதனை படைத்த மாணவிகள்..!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2024, 2:23 pm

500க்கு 499 மதிப்பெண்கள்.. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சத்தமே இல்லாமல் சாதனை படைத்த மாணவிகள்..!

தமிழகத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவு இன்று வெளியாகிறது. மாணவ மாணவிகள் தங்களின் மதிப்பெண்களை வரவேற்று காத்திருந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி மாணவி சந்தியா 499 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

முதலிடம் பிடித்த மாணவி சந்தியாவிற்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர் மாணவிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தான் வருங்காலத்தில் ஒரு வழக்கறிஞராக ஆக வேண்டுமென தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இதே பள்ளியில் தன்னுடைய சகோதரி பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பெற்றுள்ளது தனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிப்பதாகவும் மாணவ மாணவிகள் மென்மேலும் படித்து தன்னை போல் மதிப்பெண்களை பெற்று சாதனை படைக்க வேண்டும், மாணவ மாணவிகள் முடியும் என நினைத்து படிக்க வேண்டும் நம்மளால் முடியாதது ஒன்றும் இல்லை முடியும் என நினைத்தால் வெற்றி அடைய முடியும் என தெரிவித்துள்ளார் மாணவி சந்தியா.

இதே போல ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி காவிய ஜனனி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் படிக்க: பாஜக நிர்வாகி திடீர் கைது… அடுத்தது பாஜக தலைவருக்கு குறி? காங்கிரஸ் புகாரில் தேர்தல் ஆணையம் ஆக்ஷன்!

அவர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கமுதி தாலுகா பேரையூரை சேர்ந்த தர்மராஜ்-வசந்தி தம்பதியின் மகளான மாணவி காவிய ஜனனிக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!