திடீர் நிலநடுக்கம்.. அடுத்தடுத்து குலுங்கிய மாநிலங்கள் : மக்கள் பீதி!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2024, 10:37 am
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று காலை மணி 7.27க்கு துவங்கி ஒரு நிமிட நேரம் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், கம்மம் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதையும் படியுங்க: கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது… தொடரும் கிடுக்குப்பிடி விசாரணை!
வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மேஜை நாற்காலிகள ஆகியவை உள்ளிட்ட பொருட்கள் நில அதிர்வு காரணமாக சரிந்து விழுந்தன.
![5.3 Magnitude hits telangana](https://ffebb5a0.delivery.rocketcdn.me/wp-content/uploads/2024/12/5.3-Magnitude-hits-telangana.jpg)
சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களும் நில அதிர்வு காரணமாக குலுங்கியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். 5.3 அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக ரிக்டர் ஸ்கேலில் பதிவாகியுள்ளது.