சூப்பர் மார்க்கெட் தான் டார்கெட்.. சொகுசு வாழ்க்கைக்காக திருடும் குடும்பம்..!

Author: Vignesh
28 August 2024, 4:14 pm

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் சூப்பர் மார்கெட்டில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூதன முறையில் திருடும் பெண்களின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பிரபல அலிஸ் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வந்த சிலர் சந்தேகத்திற்கு இடமாக கடையின் உள்ளே சுற்றி திரிந்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள் சிசிடிவியை கவனித்தபோது அவர்கள் நூதனமாக திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

அவர்களை பிடித்து சோதனை செய்ததில் பெண்கள் உள்ளாடையில் வைத்து தனியா, பாதம், முந்திரி, ஹார்லிக்ஸ் மற்றும் உயர்ரக செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே கடை மேலாளர் ஊழியர்களின் உதவியுடன் அவர்களை பிடித்தனர். பின் மேலாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அம்பத்தூர் சிவானந்த நகரை சேர்ந்த குட்டியம்மாள் வ/43,செல்வி வ/38 சந்தோஷ,வ/22, சஞ்சய் வ/20 ஆகியோர் கைது செய்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பிரியா வ/18 என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Rajini Talk About Jailer 2 கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!