ஒரே திட்டத்துக்காக 5 முறை.. மீண்டும் நாளை 6வது முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2023, 7:29 pm

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 5 முறை இது போன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை மீண்டும் ஆலோசனை நடைபெற இருக்கிறது.

தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன, அனைத்து மாவட்டங்களிலும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்தும், விரைந்து முடிக்கப்படவேண்டிய திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கிலும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அரசுதுறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் சுனாமி வேகத்தில் முடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி முதல்வர் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!