5க்கு 4.. தேர்தல் முடிவுகளில் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பாஜக.. கோவையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2022, 4:04 pm

கோவை : பாஜக வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் பாஜக வினர் கொண்டாடி வருகின்றனர்.

இன்று பஞ்சாப், உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து 4 மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.

இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபடியான் இடங்களை வென்றுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக கோவை பாஜக சார்பில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகம் முன் பாஜக வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பாஜக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் ஏபி முருகானந்தம் தலைமையில் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களிடம் பாஜக வெற்றியை தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடினர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 1142

    0

    0