கூல் ட்ரிங்க்ஸ் குடித்த 5 வயது சிறுமி:மூக்கில் நுரை தள்ளி துடித்து பலியான கொடூரம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்….!!

Author: Sudha
12 August 2024, 2:59 pm

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்.இவருக்கு 5 வயதான காவியா ஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

காவியாஸ்ரீ நேற்று முன் தினம் வீட்டின் அருகேயுள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய்க்கு குளிர்பானம் ஒன்றை வாங்கிக் குடித்துள்ளார்.

குளிர்பானம் குடித்த சிறுது நேரத்திலேயே சிறுமி காவியாஸ்ரீ க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளியதோடு, மயங்கியும் விழுந்துள்ளார்.

உடனடியாக சிறுமியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை ராஜ்குமார் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில், தனது மகள் மரணத்திற்கு மலிவு விலை குளிர்பானமே காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 418

    0

    0