அந்த தாத்தா BAD TOUCH செய்றாரு… 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை : கூலித்தொழிலாளி கைது!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2024, 10:41 am

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை காரமடை பகுதியில் வசித்து வருபவர் 5 வயது சிறுமி. இவர் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டு இருந்து உள்ளார். அப்போது, காரமடையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது சகோதரியிடம் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர்.

தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து காரமடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காரமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி பத்திரசாமி (45) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 431

    0

    0