நீலகிரி: டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5 பேரை சிறுமுகை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர் சிறுமுகையிலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள 1811 டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 31 ஆம் தேதி விஜய் ஆனந்த் டாஸ்மாக்கில் கலெக்சனான ரூபாய் 10 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்த மேட்டுப்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமுகை ரோடு ஆலாங்கொம்பு அருகே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் விஜய் ஆனந்தை மரித்து பட்டா கத்தியை காட்டி மிரட்டி பணத்தைப் பறிக்க முயற்சித்தனர்.
இதனால் பயந்து போன விஜய் ஆனந்த் சத்தமிட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து விஜய் ஆனந்த் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தை அங்கிருந்து சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் அன்னூர் காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் சிறுமுகை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விஜய் ஆனந்த இடம் பணம் பறிக்க முயன்றவர்கள் யார் என்பதைக் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பார் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் போலீசார் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஆகாஷ் கண்ணன் 22, திருபுவனம் கீழடி காமராஜர் புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் முத்துப்பாண்டி 21, திருபுவனம் பகுதியை சேர்ந்த அந்தோணி மகன் ரவிக்குமார் 22, பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் லோகநாதன் 27 சதீஷ் (20) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மேற்கண்ட டாஸ்மாக் கடையில் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு வேலை பார்த்த ஒரு நபர் கொடுத்த தகவலின் பெயரில் பணம் பறிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் அந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.