50 புல்லட் பைக்குகள் தீயில் எரிந்து நாசம்… இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியில் ROYAL ENFIELD!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 11:00 am

50 புல்லட் பைக்குகள் தீயில் எரிந்து நாசம்… இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியில் ROYAL ENFIELD!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றது.

இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் கார்கள், பைக்குகள் தொழிற்சாலைகளுக்கு உண்டான உபகரணங்கள் ஆகியவை பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றது.

இன்று காலை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து, 350 குதிரை திறன் கொண்ட தலா 2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 90 பைக்குகள் ஏற்றிக் கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி பீகார் மாநிலத்துக்கு புறப்பட தயாராக இருந்தது.

நிறுவனத்தில் இருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்தது.

இதை கவனித்த பீகார் லாரி ஓட்டுனர் வண்டியை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு ராயல் என்ஃபீல்டு நிறுவன அதிகாரிகளுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

அவர்கள் அளித்த தகவலின் பெயரில் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மளமளவென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த 90 பைக்குகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட பைக்குகள் தீயில் எரிந்து சேதமாகின. இதனுடைய சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒரகடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி