சித்திரை திருவிழாவில் காணாமல் போன 50 செல்போன்கள் : உரியவரிடம் ஒப்டைத்த மதுரை காவல்துறை.. குவியும் பாராட்டு!!!
Author: Udayachandran RadhaKrishnan9 June 2022, 9:12 pm
மதுரை : சித்திரைத் திருவிழாவில் மாயமான 50 செல்போன்கள் உள்பட ரூ.11 லட்சம் மதிப்புடையை 109 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மாநகர காவல்நிலையங்களுக்கு உட்பட்ட தெற்குவாசல், செல்லூர், தல்லாகுளம், கூடல்புதூர், திடீர்நகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 9 மாதங்களில் காணாமல் மற்றும் தொலைந்து போன புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சைபர் கிரைம் மற்றும் மாநகர காவல்துறையின் துரிதமான நடவடிக்கையால் திருட்டு மற்றும் தொலைந்து போன 11 லட்ச ரூபாய் மதிப்புடைய 108 செல்போன்கள் மீட்கப்பட்டு, அதனை உரியவர்களிடம் காவல் ஆணையர் செந்தில்குமார் நேரடியாக வழங்கினார்.
இதில் கொரானா வைரஸ் தொற்று குறைவுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் சித்திரைத்திருவிழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், சித்திரைத்திருவிழா கூட்டத்தில் தொலைந்து போன 50 செல்போன்களும், அதில் 4 நான்கு காவல்துறையினரின் செல்போன்களும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகர காவல்துறை சார்பில் 700க்கும் மேற்பட்ட தொலைந்து போன மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.