ரஜினிக்கு 50 அடி உயர கட்- அவுட் : ரூ.3 லட்சம் மதிப்பில் டன் கணக்கில் மலர் மாலை : ஆரவாரத்தில் ரோகிணி தியேட்டர்!
Author: Udayachandran RadhaKrishnan9 February 2024, 12:00 pm
ரஜினிக்கு 50 அடி உயர கட்- அவுட் : ரூ.3 லட்சம் மதிப்பில் டன் கணக்கில் மலர் மாலை : ஆரவாரத்தில் ரோகிணி தியேட்டர்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் லால் சலாம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய நாயகர்களாக நடித்திருக்கும் இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் படம் இன்று வெளியாகும் முன்பே தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை ரஜினி ரசிகர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் லால் சலாம் திரைப்படம் வெளியானதை அடுத்து ரசிகர்கள் கொண்டாடினர்.
50 அடி உயர ரஜினி கட்டவுட் மற்றும் 2.5 டன் மலர்களால் தேர் போன்று கட்டவுட்டிற்க்கு ரசிகர்கள் சிறப்பு அலங்காரம் செய்து கொண்டாடினர்.
பெங்களூருவில் கொண்டாடுவது போன்று பெங்களூருவை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் தமிழகத்தில் முதல் முறையாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் உற்சாகமாக கொண்டாடினர்.