3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள்… நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உற்சாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2024, 4:58 pm

3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள்… நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உற்சாகம்!!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்த நடிகர் விஜய், கட்சியின் முதல் நபராக சேர்ந்தார். மேலும், விருப்பப்படுவர்கள் அனைவரும் கட்சியில் இணையுமாறும் வீடியோ வாயிலாக விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!