10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்த 50 வயது முதியவர்.. சிறிது நேரத்தில் கேட்ட அலறல் சத்தம்!
Author: Udayachandran RadhaKrishnan4 April 2025, 4:35 pm
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை தனது வீட்டிற்க்கு அழைத்து பாலியல் அத்துமீறல் செய்துள்ளார்.
இதையும் படியுங்க: பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காட்பாடி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ஜாகீரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.