இலங்கைக்கு அனுப்ப தயாராகும் 500 மெட்ரிக் டன் பால்பவுடர்… அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு
Author: Babu Lakshmanan14 May 2022, 5:33 pm
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் அனுப்பும் பணிகளை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து இலங்கைக்கு தமிழக அரசு சார்பாக இலங்கை வாழ் மக்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலம் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, ஆவின் பால் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பாலை கையாளும் திறன் கொண்ட இந்த பால் பண்ணையில், 20 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது .
இதிலிருந்து 500 மெட்ரிக் டன் பால் பவுடர் நிவாரணமாக வழங்குவதற்கான பணிகள் ஆவின் நிறுவனமான அம்மாபாளையம் சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆவின் பால் பவுடர் தொழிற்சாலைகளிலிருந்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இந்த ஆய்வின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் உடன் இருந்தனர்.