மேலூரில் பெய்த திடீர் மழை…5000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்: வேதனையில் தவிக்கும் விவசாயிகள்..!!

Author: Rajesh
9 April 2022, 4:17 pm

மதுரை: மேலூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 5000 நெல் மூட்டைகள் சேதமானதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் நெல் சேமிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தின் மதுரை கிழக்கு ஒன்றியம் மற்றும் மேலூர் கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு இங்கு சேமிக்கப்பட்டு வருகிறது .

மூன்று சேமிப்பு கிடங்குகள் உள்ள நிலையில் மேலும் 5000க்கும் அதிகமான மூட்டைகள் நெல்லானது திறந்த வெளியில் வரிசைப்படுத்தப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் முறையாக பாலித்தீன் கவர்கள் கொண்டு மூடப்படாத காரணத்தால், நேற்று பெய்த மழையின் காரணமாக, நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது.

இதனால் தமிழக அரசிற்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் இல்லையெனில் இவை அரிசிசியாக்கப்படும் போது தரமற்ற சுகாதாரமற்ற அரிசி ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

எனவே இது தொடர்பாக அதிகாரிகள் முறையாக பணியாட்கள் நியமித்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மூடி பாதுகாக்க வேண்டும் எனவும் அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

விவசாயிகள் கடின உழைப்பின் மூலம் விளைவித்த நெல்மணிகளை அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைய விட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அலட்சியப் போக்கில் நெல் மூட்டைகளை கையாண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?