மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
கோவையில் மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.59கோடி மதிப்பீட்டில் 9முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் 49.62 கோடி மதிப்பீட்டில் 263 புதிய திட்டங்கள் துவக்க விழா,சாதனை நிகழ்வு புகைப்பட கண்காட்சி, உள்ளிட்டவையினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, மாநகராட்சியில் இந்த ஆண்டு புதிய திட்டங்கள் ரூ.24 ஆயிரம் கோடி செலவில் துவங்கப்பட்டுள்ளது எனவும் கோவை மாநகராட்சிக்கு ரூ.590 கோடி பாதாள சாக்கடை திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல பில்லூர் குடிநீர் திட்டம் ரூ.780 கோடி செலவில் ஒரு வருடத்தில் நிறைவடையவுள்ளது என தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக உள்ளது என்றார்கள். அதை இன்று பார்வையிட்டோம் என தெரிவித்த அவர் சிறுவாணி அணை தொடர்பாக கலைஞர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தப்படி தண்ணீர் தரவில்லை இது குறித்து தமிழக முதல்வர் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், கடிதத்திற்கு இன்னும் பதில் சொல்லவில்லை என தெரிவித்த அவர் இனி அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெரும் முயற்சி எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதைப்போல ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா என்பதை அதிகாரி நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அறிக்கை இன்னும் வரவில்லை. எங்கு தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் ஐந்து முக்கியமான சாலைகளை இணைக்கும் விதமாக 145 கோடி திட்டம் துவங்கப்பட உள்ளது. கோவை மதுரை சென்னை போன்ற இடங்களிலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளது. அதற்கான பணி தொடர்பாக ஹைதராபாத்தில் சென்று அதிகாரிகள் பார்த்து வந்துள்ளனர் என தெரிவித்தார்.கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்படும் எனவும் அதேபோல குப்பையை மறு சுழற்சி செய்கிறோம் என தெரிவித்தார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.