சினிமாவை மிஞ்சிய சம்பவம்… நகை வியாபாரிக்கு போட்ட ஸ்கெட்ச் ; காரோடு 5 கிலோ தங்கத்தை கடத்திய கும்பல்..!!

Author: Babu Lakshmanan
29 September 2023, 9:34 am

பெங்களூரிலிருந்து தங்கத்தை வாங்கி கொண்டு காரில் வந்து கொண்டிருந்த நகை வியாபாரியை மடக்கி, காருடன் 5 கிலோ தங்கத்தை மர்மநபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராஜவீதியில் பிரசன்னா (40) என்பவர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நகை கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள பல்வேறு புதிய நகைகளை வாங்கிக் கொண்டு கார் மூலம் நேற்று இரவு பெங்களூரில் இருந்து காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் கடை பணியாளர்கள் விஜயகுமார் (46), சுரேஷ்குமார் (45), ஜெய்சன் (40) ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலம் அருகே பூலாம்பட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், பிரசன்னா வந்த காரை வழிமறித்து காரின் சைடு கண்ணாடிகளை உடைத்து நொறுக்கி, அவர்கள் எடுத்து வந்த ஐந்து கிலோ நகைகள் மற்றும் பிரசன்னா வந்த ஈட்டியோஸ் காரையும் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் பிரசன்னா அளித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொள்ளச் சம்பவம் இந்த இடத்திலிருந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்பு கம்பி செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இது குறித்து சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, வழக்கு தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரில் தங்கத்தை எடு்த்து வந்த நான்கு பேரின் கைரேகை பதிவுகளை சேகரித்துள்ளனர்.

இது தவிர கொள்ளையர்கள் விட்டு சென்றதாக கூறப்படும் செல்போன் ஒன்று எங்கே இருக்கிறது, அது யாருடையது என்பதும் குறித்தும், கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சிசிடிவி.பதிவுகள் கிடைக்கிறதா எனவும் போலீசார் விசாரணையி்ல் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில் தங்கத்தை காரில் கொண்டு வந்தவர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

தருமபுரி அருகே நள்ளிரவே நேரத்தில் நடந்து முடிந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…