பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் சடலமாக மீட்பு.. பின்னணி என்ன?

Author: Hariharasudhan
10 December 2024, 11:13 am

கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் 7ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் 5ஆம் வகுப்பும் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

மேலும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இளைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (டிச.09) காலை வீட்டில் பெற்றோர் மகனுக்கு உணவளித்துவிட்டு, வேலைக்குச் சென்று விட்டனர்.

10 year old boy found death in Kovilpatti

பின்னர், பெற்றோர் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டில் சிறுவன் இல்லை. இதனால், சிறுவனை அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது, சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும், மாயமான சிறுவன் கழுத்தில் ஒன்றரை சவரன் தங்கச் செயினும், ஒரு கிராமில் மோதிரமும் அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரும் சிறுவனைத் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (டிச.10) சிறுவன் வசித்து வந்த வீட்டின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக கிடந்து உள்ளார்.

இதையும் படிங்க: எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு நேரம் குறித்த சன் டிவி : குணசேகரனாக நடிக்கும் பிரபல நடிகர்!

இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், இது குறித்து போலீசாருக்கும், பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

5th std boy found dead in Kovilpatti

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்து ஆறு மணி நேரமாகியதாக தெரிவித்து உள்ளனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையில் சிறுவனின் உடலை கண்டுக் கதறி அழுதனர்.

தொடர்ந்து, மாயமான சிறுவன் நகைக்காக கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  • Coolie Movie Latest Updates கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
  • Views: - 109

    0

    0

    Leave a Reply