தமிழகத்தை அலற விட்ட சிறுவர் கேங்: நோட்டமிட்டு கொள்ளை: அதிரச் செய்த 2k கிட்ஸ்…..!!

Author: Sudha
17 August 2024, 5:54 pm

திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் ஒரே நாளில் 5 கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மனின் தங்க தாலி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

விசாரணையை கையில் எடுத்த போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய…சம்பந்தமே இல்லாமல் நள்ளிரவு இரண்டு மணிக்கு சைக்கிளில் சென்ற இரு சிறுவர்களும் மீதும் அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மூவர் மீது சந்தேகம் எழுந்தது.

பல்வேறு சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுவர்களின் தலைவனான ஆரணியைச் சேர்ந்த பாபாவையும் அவர் மூலமாக 6 சிறார்களையும் கைது செய்தனர்.

இவர்கள் பகல் நேரங்களில் கோழிப்பண்ணையில் வேலை செய்வார்கள். இரவு நேரங்களில் கோயில்கள் மற்றும் ஆளிள்லா வீடுகளை நோட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த மூன்றாண்டுகளில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் 500 சவரன் நகைகள் வரை கொள்ளையடித்து இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

நகைகளைக் கொள்ளையடித்து அதனை சேட்டு கடைகளில் விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தாராளமாகச் செலவு செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களின் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • kochadaiiyaan movie rerelease soon in theatres ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…