அரசு காப்பகத்தில் இருந்து 6 சிறுமிகள் தப்பி ஓட்டம் : விசாரணையில் பரபரப்பு தகவல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2023, 12:54 pm

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாத்தி தோப்பு பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் பெண்கள் காப்பகம் செயல் பட்டு வருகின்றது.

இதில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் காதல் தொடர்பான பிரச்சனையிலிருந்து மீட்கபட்ட ஏழு பெண்கள் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அதில் 6 சிறுமிகள் சுவர் ஏரி குதித்து வயல்வெளி வழியாக தப்பி ஓடினர் . ஓடுவதற்கு முன்னதாக செக்யூரிட்டியின் கதவை வெளித்தாழ்ப்பால் போட்டுவிட்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலையில் அரசு காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 6 சிறுமிகள் காணாமல் போனதை கண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

குழந்தைகள் நல குழுமத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில் 4 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசு பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாளர்களும், பணியாளர்களும் முறையாக பணி அமர்த்தபடாதது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த காப்பகத்தில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் தப்பிச் சென்று மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 548

    0

    0