விற்பனை செய்ய 6 மாதக் குழந்தை கடத்தல் : பிரபல தொலைக்காட்சி நிருபர் உட்பட 3 பேர் கைது.. 36 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 1:13 pm

நெல்லை : ஆலங்குளம் அருகே விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாதக் குழந்தையை 36 மணி நேரத்தில் போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக ஆலங்குளம் சன் டிவி நிருபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாப்பாக்குடி வேத கோயில் தெருவை சேர்ந்த தம்பதி கார்த்திக் மற்றும் இசக்கியம்மாள். கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஜூன் 20 திங்கள்கிழமை குழந்தை காணவில்லை என்று பாப்பாக்குடி காவல் நிலையத்தில் இசக்கியம்மாள் புகாரளித்தார். இதையடுத்து போலீஸார் விசாரணை செய்து 36 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.

இது குறித்து அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறியது, ஜூன் 20ல் குழந்தை காணவில்லை என்று இசக்கியம்மாள் புகாரளித்ததையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் எனது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்றது.

மேலும் கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் செல்பேசி உதவியுடன் புகாரளித்த 36 மணி நேரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சன் டிவி நிருபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • Selvaraghavan Viral Video உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!