எஸ்.பி.பி.க்காக தயாராகும் 6 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலை : அவர் அடிக்கடி உச்சரிக்கும் சொல்லை செதுக்க சிற்பிகள் புதிய யுக்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2022, 1:50 pm

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்காக பிரம்மாண்ட சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாடும் வானம்பாடி, பாடும் நிலா என பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி கடந்த 2020ம் ஆண்டு உலகை விட்டு மறைந்தார். தனது வசீகர குரலால் மக்கள் மனதில் இடம் பிடித்த அவருக்கு வயது 74.

அவரது பூவுடல் காஞ்சிபுரம் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த பண்ணை வீட்டில் எஸ்பிபிக்கு நினைவில்லம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார்.

What SPB said about COVID in his last virtual concert - The Federal

அதன்படி ஒராண்டாக பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நிறைவடையும் தருவாயில் நினைவில்ல பணிகள் நடந்து வருகிறது. இந்த இடத்தில் 6 டன் எடை கொண்ட பாறையில் எஸ்பிபி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Last Rites Of SPB To Be Held In His Farmhouse With State Honours

இதற்காக புதுச்சேரி ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் உள்ள சிற்ப கூடத்தில் உருவாக்கி வருகின்றனர். இதற்காக திருவக்கரையில் 6 டன் எடையில் பாறை எடுக்கப்ப்டடு கடந்த 6 மாதங்களாய் பாறை சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி

மேலும் எஸ்பிபி அவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் சொல்லான ”SARVE JANAASSU JANA BHAVANTHU… SARVESU JANAA SSUKINO BHAVAN”என பொறிக்கப்பட்டுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1290

    0

    0