கோவை மாநகராட்சிக்கு 6 வாரம் கெடு : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2023, 6:01 pm

கோயம்புத்தூர் மாநகராட்சியில்‌ VARDHAN INFRASTRUCTURE LIMITED திடக்கழிவு மேலாண்மை பணியினை டிப்பர் லாரிகள்‌ மூலம்‌ மேற்கொண்டு வந்தது.

அந்த பணியானது ஒப்பந்த காலம்‌ முடிவடைந்தும்‌ சுமார்‌ 3 ஆண்டு காலம்‌ காலநீடிப்பும்‌ செய்து கொடுத்திருந்தனர்.

ஆனால் கால நீட்டிப்பு செய்து கொடுத்த காலத்திற்கு விலை உயர்வு (Price escalation) வழங்கவில்லை என்றும்‌ விலை உயர்வினை வழங்க வேண்டும்‌ என்று கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ மேல்‌ வழக்கு தொடுத்திருந்தனர்.

இதையடுத்து இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செளந்தர், விலை உயர்வினை வழங்க 6 வாரங்களுக்குள்‌ பரிசீலனை செய்ய கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு ஆணை பிறப்பித்துள்ளார்‌.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 327

    0

    0