விளையாடச் சென்ற சிறுவன் மாயம்… அரசுப் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் ; சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்.. அதிர்ச்சியில் ஊர்மக்கள்…!!!

Author: Babu Lakshmanan
7 October 2023, 11:50 am

விளையாடச் சென்ற சிறுவன் மாயம்… அரசுப் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் ; சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல்…!!!

கோவை தொண்டாமுத்தூர் அருகே நாகராஜபுரம் பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை தொண்டாமுத்தூர் நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குகன்ராஜ். இவர் வேடப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு விளையாட சென்றான். அதன் பிறகு சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சிறுவனின் சித்தி நாகராணி பல இடங்களில் தேடினார்.

அப்பொழுது நாகராஜபுரத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணி நடைபெற்றது. இதற்காக 6 அடி ஆழம் 3 அடி அகலத்தில் தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தண்ணீர் எடுப்பதற்காக கட்டிட பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் சென்றனர்.

அப்பொழுது தண்ணீர் தொட்டியில் சிறுவன் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர்கள் குகன் ராஜை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 365

    0

    0