6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 65 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!
Author: Babu Lakshmanan9 August 2023, 10:22 am
வடசென்னையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வடசென்னை புதுகாமராஜர் நகர் 4வது தெருவில் வசித்து வரும் சிறுமியை பெற்றோர் அருகில் உள்ள பெட்டி கடைக்குச் சென்று சில பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது, அங்கிருந்த பாண்டியன் என்ற 65 வயது முதியவர் சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுமி அழுது கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில், தலைமறைவாக இருந்த முதியவர் பாண்டியனை போலீசார் எண்ணூரில் கைது செய்து இராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
6 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை அளித்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.