6 வருட பகை… மாமனாரைக் சுட்டுக் கொலை செய்த மருமகன்.. கடைசியில் காத்திருந்த ஷாக் ; திருப்பூரில் திடுக்!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2024, 12:59 pm

திருப்பூர் காங்கேயம் அருகே எல்லப்பாளையத்தில் விவசாயம் செய்துவருபவர் பழனிசாமி (70) இவருக்கு அம்பிகா 45 ரவி பிரசாத் 40 என்ற ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் மகள் அம்பிகாவுக்கு படியுரை சேர்ந்த ராஜ்குமார் 50 என்ற கணவர் உள்ளார். இவர் படியூரில் ஹாலோ பிளாக் கம்பெனி நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில் தந்தை பழனிச்சாமி மற்றும் கணவர் ராஜ்குமாருக்கும் இடையே கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு குடும்பத்த தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் இரு குடும்பங்களுக்கும் போக்குவரத்து இல்லாமல் இருந்த நிலையில் இதை மனதில் வைத்துக் கொண்ட மருமகன் ராஜ்குமார் மாமனார் பழனிச்சாமியை கொலை செய்யும் நோக்கில் வீட்டிலிருந்து இன்று துப்பாக்கி எடுத்துக்கொண்டு எல்லப்பளையத்தை நோக்கி வந்துள்ளார்

அப்போது பழனிச்சாமி ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு எதிரே வந்த நிலையில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து 5முறை சுட்டு கொன்று விட்டு பின்னர் ராஜ்குமார் படியூர் சென்று தனது வீட்டிற்கு சென்று விட்டு எனது மாமனாரை கொன்று விட்டேன் என்று கூறிக்கொண்டு தன்னை தானே நெத்தியில் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் காயம் பட்ட அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ராஜ்குமாரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறில் மருமகனே மாமனாரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது

மேலும் இந்த துப்பாக்கி சூடு குறித்து ஊதியூர் மற்றும் காங்கேயம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி