6 வருட காதல்.. கடும் எதிர்ப்பால் தாலி கட்டிய கோயம்புத்தூர் மாப்பிள்ளை : தண்டவாளத்தில் தலையை வைத்த ஜோடிகள்!
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே புதுச்சத்திரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(26). இதே ஊரைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு தேன்மொழிக்கு கோயமுத்தூரை சேர்ந்த முரளி என்பருவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. முரளி தனது மனைவி தேன்மொழியுடன் கோயமுத்தூரில் வாழ்ந்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பும் தேன் மொழியும் மணிகண்டனும் பழகி வந்துள்ளனர். தேன்மொழி அடிக்கடி மணிகண்டவுடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனை கண்ட முரளி மனைவியை கண்டித்துள்ளார்.
இதனை அடுத்து தேன்மொழி மணிகண்டன் உடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தனது மனைவியை காணவில்லை என்ன முரளி கோயமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து பழனி செல்லும் ரயில் முன்பு விழுந்து தேன்மொழியும் மணிகண்டனும் தற்கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்த பழனி ரயில்வே போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து பழனி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.