வங்கி மேலாளர் வீட்டில் மர்ம நபர்களை கைவரிசை… 62 பவுன் நகை அபேஸ்.. போலீசார் விசாரணை…!!
Author: Babu Lakshmanan2 December 2023, 9:01 am
கோவில்பட்டியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகை திருட்டு கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ்நகரைச் சேர்ந்த சந்திரமோகன் (65). இவரது மகன் கார்த்திக். இவர் தேனி மாவட்டம் தமிழ்நாடு மெர்கண்டையல் வங்கி கிளையில் உதவி மேனேஜராக பணியாற்றி வருகிறார். சந்திரமோகன் அவரது மனைவியும், மகன் கார்த்திக்கை பார்ப்பதற்காக கடந்த திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
வீட்டில் உள்ள பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக ஊழியர் 2 நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்வது உண்டு. பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக பணியாளர் சந்திரமோகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்க பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, பணியாளர்கள் சந்திரமோகன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.
மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளை நடந்த இடத்தில் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். இதில் வீட்டில் இருந்த 62 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருப்பது தெரிய வந்தது. மேலும், பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் உடைத்து சிதறி கிடந்தது. இது குறித்து. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகை மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.