65 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொலை செய்த 19 வயது இளைஞர்.. கருவேலம் காட்டுக்குள் கிடந்த சடலம் ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
1 April 2023, 8:45 am

திண்டுக்கல் : நத்தம் அருகே மூதாட்டியை கற்பழித்துக் கொலை செய்த 19 வயது இளைஞரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அடுத்துள்ள ரெங்கையசேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவரின் மனைவி பெரியம்மாள் (65). இவர் தனது வீட்டிற்கு எதிரே உள்ள கருவேலம் காட்டில் பிப்ரவரி 11ஆம் தேதி கொலை செய்யப்பட்டு புதர்காட்டுக்குள் உயிரிழந்தே கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து குற்றவாளி யாரென தெரியாமல் இருந்து வந்த நிலையில் ஆய்வாளர் தங்கமுனியசாமி சார்பு ஆய்வாளர்கள் ஜயபாண்டியன், இசக்கிராஜா,ஜெயகணேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக துப்பு துலக்கி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதே ஊரை சேர்ந்தவரும், பக்கத்து வீட்டில் வசிப்பவருமான பிச்சைமணி மகன் சரவணக்குமார் (19) என்பவரை கைது செய்தனர்.

இந்தக் கொலை குறித்து சரவணகுமார் வாக்குமூலத்தில் பெரியம்மாளை கற்பழித்து கொலை செய்து மூக்குத்தியை பிடுங்கி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ந்து போன போலீசார், அவரை கைது செய்ததுடன், மறைத்து வைத்திருந்த மூக்குத்தியை பறிமுதல் செய்தனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!