திருநெல்வேலி மேலப்பாளையம் பிபிசி காலனியில் எதிரே உள்ள இரண்டு வீடுகளில் கொள்ளை 67 சவரன் நகைகள் ஒரு லட்சம் பணம் கொள்ளை போலீசார் விசாரணை
திருநெல்வேலி மாநகர் மேலப்பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தெற்கு புறவழிச்சாலை அருகிலுள்ள பிபிசி காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை. திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த புதன்கிழமை தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்றுள்ளார். பேத்தி பிறந்தநாள் விழாவை திருப்பதியில் கொண்டாடுவதற்காக அவர்கள் சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதுமாக கீழே கிடந்துள்ளது. மாடியில் பின்பக்க கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. பீரோவில் அவர் வைத்திருந்த 67 சவரன் நகைகள் மற்றும் 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து, அவர் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் வீட்டில் உள்ள கைரேகைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
வீட்டின் பின்பக்க சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருக்கும் நிலையில் அது வழியாக ஏறி மொட்டை மாடிக்கு சென்று வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் வந்தது தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய கொள்ளையர்கள் வீட்டிற்குள் மிளகாய் பொடிகளை தூவி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே செல்லத்துரை வீட்டின் எதிரே இருக்கும் மற்றொரு வீட்டிலும் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் நகைகள் ஏதும் இல்லாததால், 2000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் ஆசிரியர் மகாராஜன் சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பி உள்ளார்.
இரண்டு வீடுகளிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் .
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.