6 அடி உயரத்தில் பர்க்கர் : சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உணவு தயாரிப்பாளர்!!
Author: Udayachandran RadhaKrishnan6 March 2022, 11:11 am
கோவை : கோவையை சேர்ந்த ‘செஃப்’ 6 அடி உயரத்தில் பர்க்கர் தயாரித்து கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கோவையை சேர்ந்தவர் அஜித்குமார் நாவாவூர் பகுதியில் ஜாம்மீஸ் என்ற உணவு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த சூழலில் இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் உயரமான பர்க்கர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அஜித்குமார் 6 அடி 1 அங்குலம் உயரத்தில் பர்க்கர் ஒன்றை தயாரித்துள்ளார்.
இந்த பர்க்கரை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சித்த அஜித்குமார், இதற்கான நிகழ்வை ஏற்பாடு செய்தார். அதன்படி, கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இவர் இடம்பிடித்துள்ளார்.
6 அடி உயரமுள்ள இந்த பர்க்கர் இந்தியாவிலேயே உயரமான பர்க்கர் என்ற பர்க்கர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த சாதனை நிகழ்வில் மெரைன் கல்லூரி நிறுவனர் அருண் பிரசாத், எம்.ஓ.இ நிறுவனர் நவனீதன், மெரைன் கல்லூரி முதல்வர் ராமையா செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்