விழுப்புரம் : ஆறாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விழுப்புரம் நகரில் புதுச்சேரி சாலையில் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி MRIC RC பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்விக்கட்டணம் இல்லாததால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்..
இந்நிலையில் விழுப்புரம் அடுத்த பாணம் பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி இங்கு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இந்த பள்ளியில் பணியாற்றிவரும் வகுப்பாசிரியர் ஜெயசீலன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கண்ணீர் மல்க வீட்டில் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் இது குறித்து புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இந்த தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி அந்தப் பள்ளியில் மாணவி மற்றும் புகார் தெரிவிக்கப்பட்ட ஜெயசீலன் வைத்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் தாளாளர் குற்றம்சாட்டப்பட்ட ஜெயசீலன் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.. பள்ளியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.