கோவை : கோவையில் மர்மமான முறையில் இறந்த யானையின் வயிற்றில் 7 மாத கரு இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம் பில்லூர் அணை மானார் பிரிவு அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. ஆனால் யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இதனைப் பார்த்த வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் முதுமலை யானைகள் முகாம் வடக்கு கால்நடை மருத்துவர் ராஜேஷ் தோலம்பாளையம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் கவிதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் இறந்த யானையின் உடலை பார்வையிட்டு பரிசோதனை செய்தபோது யானையின் வயிற்றில் நன்கு வளர்ந்த 7 மாத கரு இருந்தது தெரியவந்தது. மேலும் யானையின் பின் பகுதியில் ஆண் யானை தந்தத்தால் குத்திய காயம் இருந்தது தெரியவந்தது.
பிரேத பரிசோதனைக்கு பின் பெண் யானையின் உடல் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் அதே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. வயிற்றில் குட்டியுடன் இருந்த பெண் யானை உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.