ஒரே பதிவு எண்ணில் 7 டூரிஸ்ட் வாகனங்கள் : அதிர்ந்து போன போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2023, 4:10 pm

கோவை மாவட்டம் சூலூரில் ரோந்து பணியின் போது ஒரே எண்ணில் இரண்டு டூரிஸ்ட் வேன்களை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அதேபோல் 7 டூரிஸ்ட் வேன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே வழக்கமாக டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இந்நிலையில் நேற்று இரவு சூலூர் போலீசார் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பேருந்து நிலையத்தின் முன்புறமாக ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு டூரிஸ்ட் வேன்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த வேன் டிரைவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதற்கு முன்பாகவே டூரிஸ்ட் டாக்ஸி வைத்து இயக்கும் உரிமையாளர்கள் பேருந்து நிலையத்தில் அருகில் இரண்டு வண்டிகள் ஒரே நம்பரை கொண்டு இயங்குவதை கண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கண்ட போலீசார் அந்த வாகனத்தின் உரிமையாளர் செந்தில்குமார் என்பதும் இவருக்கு சொந்தமான ஏழு டூரிஸ்ட் வாகனங்களிலும் இதே போன்ற பதிவு எண்ணை தான் வைத்திருப்பதாகவும் ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஒரே எண்ணில் வாகனத்தை இயக்கி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து வாகனத்தின் மீதும் வாகன உரிமையாளர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

ஆர்டிஓ அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர் ஒரே எண்ணில் ஏழு வாகனங்கள் அப்பகுதியில் வலம் வந்தது பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!