7ம் வகுப்பு மாணவி 3 மாத கர்ப்பம் : தனிமையில் இருந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு இளைஞர்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 8:34 pm

கன்னியாகுமரி : 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த
கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த தம்பதியர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 13-வயதில் பெண் குழந்தை உள்ளது.

13-வயதான அந்த சிறுமியை மண்டைக்காட்டை அடுத்த பரப்பற்று பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். 13-வயதான அந்த சிறுமி கடந்த சில தினங்களாக சோர்வடைந்து காணப்பட்ட நிலையில் பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்

அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமுற்று இருப்பதை கண்டு அதிர்ந்து உடனடியாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிற்ச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி 3-மாத கர்ப்பமாக இருப்பதாக குழந்தைகள் நல அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த 28-வயதான குமார் என்ற கூலி தொழிலாளி அடிக்கடி வீட்டிற்கு வருவதில் பழக்கம் ஏற்பட்டதாகவும் ஒருநாள் பாட்டி இல்லாத நிலையில் வீட்டிற்கு வந்த குமார் தனிமையில் இருந்த தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

அன்று முதல் தான் தனிமையில் வீட்டில் இருக்கும் போது வீட்டிற்கு வரும் குமார் தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன்னையும் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இதனையடுத்து சிறுமி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் குழந்தைகள் நல அதிகாரிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் குமார் மீது போக்சோ உள்ளிட்ட 5-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவனை கைது செய்து நாகர்கோவில் மகிழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

சிறுமி ஒருவரை கூலி தொழிலாளி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ