மத்திய அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8 கோடி ஏப்பம் : பதுங்கிய பெண் உட்பட 2 பேர்..!!!
Author: Udayachandran RadhaKrishnan28 July 2023, 8:52 pm
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை பணியில் வேலை வாங்கித் தருவதாக கூறியும் போலி அரசு ஆணை வழங்கியும் 110 பேரிடம் ரூ. 8 கோடி மோசடி பெண் உட்பட இரண்டு பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மல்லீஸ்வரி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சங்கர் ராஜா ஆகியோர் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயமுத்தூர், தென்காசி, கரூர், நாமக்கல் உட்பட பல ஊர்களில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி செயல் அலுவலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 110 பேரிடம் ரூ 8 கோடி மோசடி செய்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த மாதங்கி என்பவரும் ரூ 7லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து ஏமாந்துள்ளார். மாதங்கி மேலும் ஏழு பேரிடம் பணம் வாங்கி கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் சங்கர் ராஜா மற்றும் மல்லீஸ்வரி இடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மதுரையை சேர்ந்த மாதங்கி கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லீஸ்வரி மற்றும் சங்கர் ராஜாவை தேடி வந்தனர்.
மாதங்கியை போல் 27 பேர் இதுவரை புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து இரண்டு பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் குற்றவாளிகள் இரண்டு பேரும் தாராபுரத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் இன்று அவர்களை கைது செய்தனர்.
திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் ஆஜர் படுத்தினர் இவர்களை 15 நாள் காவலில் வைக்க மெஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதனை அடுத்து சங்கர் ராஜா திண்டுக்கல் மாவட்ட சிறைக்கும் மல்லீஸ்வரி நிலகோட்டை பெண்கள் சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
0
0