மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 இலவச ஆம்புலன்ஸ்கள் : கோவை ஆட்சியர் துவக்கி வைத்தார்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2022, 7:09 pm

கோவை : கோவை மாவட்டத்திற்காக 8 ஆம்புலன்ஸ்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட 198 ஆம்புலன்சுகள் 7 மற்றும் மன நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் ஒன்று என மொத்தம் 8 ஆம்புலன்சுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

பாஷ் என்ற தனியார் நிறுவனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு ஆம்புலன்ஸை வழங்கியுள்ளது.

இதனையடுத்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சாய்பாபா காலனி, பீளமேடு, பாப்பம்பட்டி பிரிவு, மண்ணூர், அரசூர், சுங்கம் மற்றும் அத்திப்பாளையம் ஆகிய 7 இடங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் இயங்கும். இ.சி.ஆர்.சி என்ற திட்டத்தின் கீழ் 140க்கும் மேற்பட்ட மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவற்றவர்களை மீட்டு பாராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸை பயன்படுத்த 6374713767 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கானது. குறிப்பாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ளவர்களை மீட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் கவனித்துக் கொள்ளலாம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் டெலி கவுன்சிலிங் யூனிட் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.” என்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி