8 வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு : சலவை தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை… ரூ.2 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2022, 7:39 pm

கரூர் : 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளி சண்முகவேல் என்பவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

கரூர் சின்ன ஆண்டான்கோவில் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் கார்த்திக்- நாகமணி. இவர்களது 8 வயது மகனை அருகில் வசித்து வரும் சலவைத் தொழிலாளி சண்முகவேல் என்பவர் கடந்த 19-09-21 அன்று சாக்லேட் மற்றும் பிஸ்கட் தருவதாக அழைத்துச் சென்று சலவை செய்யும் அறைக்குள் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, 19-09-21 அன்று கரூர் நகர காவல் நிலையத்தில் சலவை தொழிலாளி சண்முகவேல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமாபானு இன்று தீர்ப்பு வழங்கினார்.

சிறுவனை ஏமாற்றி கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கியும், போக்சோ சட்ட பிரிவின் படி 20 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும், சிறுவன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டதற்கு தமிழக அரசு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!