கோவில்பட்டி அருகே வேம்பாரில் 8 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் வேம்பார் சிந்தாமணி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி முத்து மேரி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று முத்துக்குமார் கடல் தொழிலுக்கு சென்று விட்டார். தாய் முத்து மேரி தனது இரண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி இருந்தார்.
மூன்றாவது குழந்தையான சிறுவன் அபிஷேக்குமார் காய்ச்சல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனிடையே, தாய் முத்து மேரி வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுவன் அபிஷேக்குமார் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்த சிறுவன் அபிஷேக்குமார் கழுத்தில் ரத்த காயங்களுடன் கூச்சலிட்டபோது, அவ்வழியாக நடந்து சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுவன் அபிஷேக்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் வேம்பார் கடலோர காவல் நிலையம் அருகே நடந்ததால் இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேஷ் பெருமாள் தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.