நாக்கு அறுப்பட்டு நோய்வாய்ப்பட்ட 8 வயது பெண் யானை : சிகிச்சை பலனின்றி பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2022, 5:01 pm

கோவை : கோவை போளுவாம்பட்டி வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 8 வயது பெண் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர், தொடர்ந்து இரண்டாவது நாளாக தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகம் முள்ளாங்காடு தாணிக்கண்டி வனப்பகுதியில் உடல் நல குறைவால் பெண் குட்டி யானை அவதிப்பட்டு வருவதை, ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் கண்டறிந்தனர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கால்நடை மருத்துவர்கள் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று, காலை முதல் யானை நடமாட்டத்தை கண்காணித்து, கண்டறிந்தனர்.

இதையடுத்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு தாணிக்கண்டி அருகே மயக்க ஊசி செலுத்தி, நேற்று முதலாக சிகிச்சையளித்து வந்தனர் இந்த நிலையில் முதல் கட்ட ஆய்வில் யானையின் வாய் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

90 சதவீதம் நாக்கு அறுபட்டுள்ளதன் காரணமாக, இரண்டாவது நாளாக மயக்க நிலையில் உள்ள யானைக்கு வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் மருந்துகள் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்க பட்டிருந்தது,

மேலும் டாப்சிலிப் பகுதியில் இருந்தும் யானை கண்காணிப்பு குழுவினர் வரவழைத்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி யானை இறந்தது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி