பாலியல் வன்கெடுமைக்கு பலியான 80 வயது மூதாட்டி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2025, 12:48 pm
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியை மிரட்டி பணம், நகை கேட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன்னிடம் எதுவும் இல்லை என கூற, மூதாட்டியை சரமாரியாக தாக்கிய மர்மநபர் பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடியுள்ளார்.
இதையும் படியுங்க: கோவையில் ஜல்லிக்கட்டு திருவிழா பணிகள் விறுவிறு… 750 காளைகளுடன் மல்லுக்கட்டும் 500 காளையர்கள்..!!
இதையடுத்து மூதாட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த 39 வயதான நாகராஜ் என்பவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய சென்ற போது தப்பியோட முயன்று கீழே விழுந்து கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டதாக, ஏப்ரல் 7ஆம் தேதி இரவு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.