தனியாக வசித்த மூதாட்டி… கதவை திறக்காததால் எட்டிப் பார்த்த அக்கம்பக்கத்தினர்.. காத்திருந்த அதிர்ச்சி : பாட்டியையும் விட்டு வைக்காத மர்மநபர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan6 June 2022, 10:50 am
புதுச்சேரி : 80 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட சாமிபிள்ளை தோட்டம், கம்பர் வீதியில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலை (வயது 80) என்ற மூதாட்டி தனிமையில் வசித்து வந்தார்.
இதனிடையே இன்று காலை முதல் மூதாட்டி அஞ்சலை வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு இரவு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று சோதனை செய்த போது மூதாட்டி அஞ்சலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பது தெரியவந்தது.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்பூலன்ஸ் மூலம் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.