இன்டர்நெட் காலியானதால் பப்ஜி விளையாட முடியாத விரக்தி.. 8ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

Author: Babu Lakshmanan
27 March 2023, 5:50 pm

தூத்துக்குடி: இன்டர்நெட் தீர்ந்ததால் கேம் விளையாட முடியாத விரக்தியில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் நகரைச் சேர்ந்த சுசிகரன் – வித்யா சரஸ்வதி தம்பதி மகன் குகன் (13). சுசிகரன் பள்ளி வாசலில் பெட்டிக்கடை வைத்துள்ளார். குகன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். எப்போதும் வீட்டில் இருக்கும் 2 செல்போன்களை எடுத்து நண்பர்களுடன் பப்ஜி, ப்ரிபயர் உள்ளிட்ட கேம்களை விளையாடி வந்துள்ளார்.

வீட்டில் பெற்றோர் பலமுறை கண்டித்தும் குகன் கேட்கமால் செல் போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரண்டு செல்போன்களிலும் நெட் தீர்ந்ததால் விளையாட முடியவில்லை என்ற மனவேதனையில் குகன் இருந்து வந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!