8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு ; சிறுமியை கர்ப்பமாக்கிய மரம் வெட்டும் தொழிலாளி போக்சோவில் அதிரடி கைது

Author: Babu Lakshmanan
23 November 2022, 11:30 am

குளித்தலையில் 8-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்து, கர்ப்பமாக்கிய மரம் வெட்டும் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கொசூர் பகுதி பனைமரத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் மரம் வெட்டும் தொழிலாளி தினேஷ் குமார் (27). அதே பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும், பள்ளி சிறுமியின் பெற்றோர்கள் சொந்தமாக கருவேல மரம் என்னும் மரங்களை அறுத்து, அதனை கொண்டு கரி தயாரிக்கும் எந்திரம் வைத்துள்ளதால் வெளியில் சென்று விடுவார்கள்.

இதனால், பள்ளிச் சிறுமியும், அவர்கள் தம்பியும் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (27), கடந்த ஜூன் மாதம் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த தினேஷ்குமார் அவரது வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி வயிற்று வலி இருப்பதாக பெற்றோர்களிடம் கூறியதால், சிறுமியை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர்.

இது குறித்த தகவலை குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். இதனையடுத்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி விசாரணை மேற்கொண்டு, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.

இளைஞர் தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கரூர் நீதிமன்றத்தில் தினேஷ்குமாரை ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 423

    0

    0