கழுத்தில் தாலியுடன் வகுப்புக்கு வந்த 8ஆம் வகுப்பு மாணவி.. பகீர் பின்னணி!

Author: Hariharasudhan
12 February 2025, 4:48 pm

கிருஷ்ணகிரியில், 8ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம் முடித்து வைத்ததாக 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவி கழுத்தில் தாலிக்கயிறுடன் இருந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியை அழைத்து தனியாக விசாரித்துள்ளனர். அப்போது, நேற்றுதான் தனக்கு திருமணம் ஆனதாக மாணவி கூறி உள்ளார். மேலும், இந்த மாணவிக்கு அவரது பெற்றோரே முன்னின்று திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

Child marriage in Krishnagiri

அதே மாவட்டத்தின், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், இந்த மாணவிக்கும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோயிலில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து, ஆசிரியர்கள் இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: தயாரிப்பாளரின் காலை வாரும் இளையராஜா…தேவா எவ்ளோ பெஸ்ட்…பிரபலம் பகீர்.!

இந்தத் தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பான புகாரின் பேரில், மாணவி மற்றும் மணமகனின் பெற்றோர், மணமகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ஆண்டியால் பறிபோன வாய்ப்பு..நடிகர் கரண் வீழ்ந்தது எப்படி…பிரபலம் சொன்ன அந்த தகவல்.!
  • Leave a Reply