தவெக நிர்வாகியின் தொல்லை.. 8ம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு!

Author: Hariharasudhan
13 February 2025, 2:07 pm

விழுப்புரத்தில், தவெக நிர்வாகியின் காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இந்த மாணவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி சரவணன் என்பவர் காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால், அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். எனவே, மாணவியின் தாயார், சரவணனின் பெற்றோரிடம் கூறிக் கண்டித்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவியை வழிமறித்த சரவணன், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், அம்மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில், அந்த மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

TVK worker arrested in Lover issue

இதன் பின்னர், மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில், சரவணன் மற்றும் அவரது சகோதரி சங்கீதா ஆகியோர் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆண்டியால் பறிபோன வாய்ப்பு..நடிகர் கரண் வீழ்ந்தது எப்படி…பிரபலம் சொன்ன அந்த தகவல்.!

மேலும், சரவணனைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது சகோதரியையும் தீவிரமாக தேடி வருகிறனர். மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே புகார் அளித்தபோது, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் குற்றம் சாட்டி உள்ளார்.

  • முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!
  • Leave a Reply