இரவோடு இரவாக பாஜக நிர்வாகிகள் 9 பேர் கைது : காவல் நிலையத்தில் பாஜகவினர் குவிந்ததால் பரபரப்பு.. பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 9:17 pm

திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஆபாசமாக பேசி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்நத் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி புத்தார் நால் ரோடு பகுதியில் இன்று காலை பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பாஜக உறுப்பினர் லட்சுமி நாராயணன் உட்பட 11பேர் மீது உறையூர் காவல்துறையினர் 5பிரிவின் கீழ் வழக்கு பதிவு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பாஜக திருச்சி மாவட்டச் தலைவர் ராஜசேகரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம், ரமேஷ், ஹரி, லட்சுமி நாராயணன், நாகேந்திரன், பரஞ்சோதி, காளீஸ்வரன், பரஞ்சோதி ஆகிய 9 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட
கைது செய்ததை தொடர்ந்து அவர்கள் 9பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சோதனை எடுத்த பின்னர் ஜுடிஷியல் மேஜிஸ்ட்ரேட்டர் எண்6 நீதிபதி சிவகுமார் வீட்டில் அவரது முன்பு ஆஜர்படுத்தினர்.

பிஜேபியினர் 9 பேர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜகவினர் திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து அங்கு காவல்துறை துணை ஆணையர் அன்பு மற்றும் காவல்துறையினர் அசம்பாவிதம் ஏதும் நடத்தாமல் தடுக்கும் வகையில் குவிக்கப்பட்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ